வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

கோவை நகர சாலைகள்

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக கோவையில் தான் எனது வாசம். இத்தனை ஆண்டுகளில் கோவை நகரம் வளர்ச்சி ஏதும் கண்டுள்ளதா என்றால் எதுவுமில்லை என்று தான் சொல்ல வேண்டும். கழுதை தேய்ந்து கட்டெறும்பானது தன் மிச்சம். மக்கள் தொகை மட்டுமே அதிகரித்திருக்கும். அதே சாலைகள், அதே கட்டிடங்கள் அதே மனிதர்கள். கொஞ்சமும் மாற்றமில்லை. முன்னர் நூற்றுக்கணக்கான பஞ்சாலைகள் இருந்த இடம் இப்போது புல் முளைத்து விட்டன. அல்லது பிளாட்டுகள் வந்துள்ளன. புதிததாக எதானும் பெரிய தொழிற்சாலைகள் வந்துள்ளனவா என்று பார்த்தால்....ப்ச்... சுத்தம். மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் வீட்டுக்கு ஒரு இரு சக்கர வாகனம் மட்டுமே உள்ளது. அதுவும் நிறுத்தக்கூட பல வீடுகளில் இடம் இல்லை. முக்கிய வீதிகள் சாலைகள் வழியாக முன்னர் சுலபமாக சென்று வர முடியும். aanaal, இன்றைய தேதியில் சாலையோரம் முழுமையும் இரு சக்கர வாகனங்களும், கார்களும் இடத்தை அடைத்துக்கொண்டு இருப்பதால் ஏறக்குறைய அனைத்து சாலைகளும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு விட்டன.

புதிதாக சாலைகளும் அமைக்கப்படவில்லை, அகலப்படுத்தப்படவும் இல்லை. காரணம் போதிய இட வசதி இல்லை. ஒரு வாகனத்திற்கு இவ்வளவு சதுர அடி தேவை என்று எடுத்துக்கொண்டு ஊரிலிருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையோடு பெருக்குங்கள். குறிப்பிட்ட சதுர அடி வரும். இத்தனை சாலைகளின் நீல அகலங்களை பெருக்கி வரும் சதுர அடியிலிருந்து கழித்த்ப்பார்த்தால் மிஞ்சுவது மக்கள் நடமாட மட்டுமே மிஞ்சும். இதில் பஸ் லாரி போன்ற வாகனங்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். தற்போது, மினி லாரி, மினிடோர் என்று விதம் விதமான புது வடிவ வாகனங்களும் எண்ணிக்கையில் பெருகி விட்டன.

இது வரை இந்த முப்பத்தைய்ந்து ஆண்டு காலத்தில் தொலை நோக்கு பார்வையுடன் இந்த நகரத்தை யாரும் திட்டமிட்டு செயல் படுத்த வில்லை. அவினாசி ரோடு மட்டும் அகலப்படுத்துகிறேன் பேர்வழி என்று சுமார் ஆயிரத்து நூறு மரங்களை வெட்டி சாய்த்ததுதான் மிச்சம். அந்த மரங்கள்அடி மரங்கள் தேமே என்று இப்போது அகலப்படுத்தப்பட்ட ரோட்டின் ஓரத்தில் தான் அடையாளமாக உள்ளன. ரோட்டின் நடுவில் அமைக்கப்படேண்டிய மீடியங்கள் இன்று வரை போடப்படவில்லை. வெட்டப்பட்ட ஒரு மரத்திற்கு பத்தி ஐந்து கன்றுகள் நடவதாக சொல்லப்பட்டது. எங்கே நட்டிருக்கிறார்கள் என்று தேடிப்பாருங்களேன்.

திருச்சி ரோடு பற்றி கேட்கவே வேண்டாம். இங்கு ரோட்டை அகலப்படுத்தாமலேயே, மீடியங்கள் மட்டும் போடப்பட்டுவிட்டன . முன்னால் செல்லும் வாகனம் அன்ன நடை போட்டால் பின் வரும் வாகன ஓட்டிகள் பொறுமை இழந்து விடுகிறார்கள். முந்தி செல்ல வாய்ப்பே கிடைப்பதில்லை.

மேட்டுப்பாளையம் ரோடு ஊர்ந்து செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே உகந்தது. சத்தியமங்கலம் செல்லும் பாதை நெரிசலுக்கு உதாரணம் ஊர்ந்து சென்ற சொகுசு பேருந்து சொகுசாக ஐந்து பேர் மேல் ஏறி உயிர்களை மாய்த்ததுதான்.

போள்ளச்சிரோடு ஈச்சனாரி பாலம் இன்றுவரை கோவையின் துயரம் எனலாம். இதில் கொடுமை என்னவென்றால், ஆத்துப்பாலத்தில் பழைய பாலத்தின் அருகில் கட்டப்பட்ட புதிய பாலத்திற்கு சுங்கம் கட்ட வேண்டிய அதே நேரம் பழைய பாலத்திற்கும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மக்கள் சுங்கம் கட்டியது/kattivaruvathu வரலாறு காணாத புதுமை.

போதாக்குறைக்கு நகருக்கு வரும் ஒவ்வொரு புதிய கமிஷனரும் தன் பங்கிற்கு புதுமை அல்லது மேன்மை செய்கிறேன் என்ற பெயரில் தன்னிச்சையாக விதிகளை அமைப்பது. இதற்கு உதாரணம் அவினாசி ரோடு மேம்பாலத்தில் இரு சக்கர வாகனகள் செல்லக்கூடாது என்பது. இதனை அமல் படுத்த பக்கத்திற்கு இரண்டு என்று பதினைந்து போலிசாருடைய காவல், பாலத்தை சுற்றி.

எதோ என்னால் ஆன புலம்பல் சரி செய்ய முடிந்தால் பாருங்கள். இல்லாவிடில் படித்துவிட்டு மறந்து விடுங்கள்........இன்னும் புலம்புவேன்.